/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி
/
தாராபுரம் அருகே நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி
ADDED : ஜூலை 18, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாராபுரத்தை அடுத்த குண்டடம், வெறுவேடம்பாளையத்தை சேர்ந்தவர் கிரிராஜ், 52; ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாலை அதே பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கூட்டு போட்டு வந்த நான்கு தெருநாய்கள், ஆடுகளை சுற்றி வளைத்து, சரமாரியாக கடிக்க தொடங்கின.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, நாய்கள் கூட்டத்தை விரட்டி அடித்தனர். இதில் ஆறு ஆடுகள் பலியாகி விட்டன. ஆறு ஆடுகளும் சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மதிப்பு, ௧.௨௦ லட்சம் ரூபாய். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.