/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் சொத்து தகராறில் வக்கீல் படுகொலை பள்ளி முதல்வர் உள்பட 6 பேர் கைது
/
தாராபுரத்தில் சொத்து தகராறில் வக்கீல் படுகொலை பள்ளி முதல்வர் உள்பட 6 பேர் கைது
தாராபுரத்தில் சொத்து தகராறில் வக்கீல் படுகொலை பள்ளி முதல்வர் உள்பட 6 பேர் கைது
தாராபுரத்தில் சொத்து தகராறில் வக்கீல் படுகொலை பள்ளி முதல்வர் உள்பட 6 பேர் கைது
ADDED : ஜூலை 29, 2025 01:59 AM
தாராபுரம் ஜதாராபுரத்தில் சொத்து தகராறில், வக்கீல் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கல்லுாரி சாலையை சேர்ந்த வக்கீல் முருகானந்தம், 41; மாற்றுத்திறனாளி. சென்னை உயர்நீதிமன்றம், தாராபுரம் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வக்கீல். இவரது தந்தை லிங்கசாமியை, அவரது தம்பி தண்டபாணி, 66, என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்தார். இதனால் முருகானந்தம், தண்டபாணி குடும்பத்துக்கு முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தனக்கு சொந்த
மான இடத்தை தண்டபாணி ஆக்கிரமித்து, பள்ளி கட்டடம் கட்டியதாக, முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் மூன்று மாதத்துக்கு முன், முருகானந்தத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் சட்ட
விரோத கட்டுமானத்தை அகற்றும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமித்த நிலத்தை மீட்பதற்காக, சர்வேயர் இரு தரப்பினரையும் நேற்று அழைத்திருந்தார். இதற்காக முருகானந்தம், தண்டபாணி ஆகியோர் நேற்று மதியம், ௩:௦௦ மணிக்கு சர்ச்சைக்குரிய நிலம் உள்ள பகுதிக்கு சென்றனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கும்பல், முருகானந்தத்தை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, தலையில் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார்.
தாராபுரம் போலீசார், தாராபுரம் தனியார் பள்ளி முதல்வர் தண்டபாணி, தாராபுரம், வினோபாநகர் நாட்டுத்துரை, 65; திருச்சி தட்சிணாமூர்த்தி, 29; தொட்டியம் நாகராஜன், 29; சேலம் மாவட்டம் வாழப்பாடி, ராம், 22; நாமக்கல், கைகாட்டி, சுந்தரன், 26, என ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தாராபுரம் போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட முருகானந்தம், கால்கள் சற்றே வளைந்த மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகாதவர். தாயுடன் வசித்து வந்தார். சொத்து தகராறில் அண்ணனை கொன்ற நிலையில், அவரது மகனையும் தண்டபாணி தரப்பு கொலை செய்திருப்பது, தாரா
புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வக்கீல் படுகொலையை கண்டித்து, தாராபுரத்தில் இன்று வக்கீல்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

