ADDED : ஜன 26, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே மறவபாளையம் ஊராட்சி, திட்டம்பாளை-யத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், தோட்டத்தில் பட்டி அமைத்து, 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வரு-கிறார்.
வழக்கம்போல் தனது காட்டில் மேய்ச்சலுக்கு நேற்று விட்-டிருந்தார். அப்போது கூட்டமாக வந்த தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்ததில், மூன்று ஆடுகள், ஆறு குட்டிகள் பலியாகி விட்டன. இறந்த ஆடுகளின் மதிப்பு, ௬௦ ஆயிரம் ரூபாய். காங்-கேயம் பகுதியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர்-வதால், விவசாயிகள் மன உளைச்சலுக்கும், பொருளாதார ரீதி-யாக பலத்த நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.