/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா பொருள் விற்பனை 6 கடைகளுக்கு அபராதம்
/
குட்கா பொருள் விற்பனை 6 கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 25, 2025 01:13 AM
பெருந்துறை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து, பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் பஞ்சாயத்து பணியாளர்கள், நேற்று ஆய்வு செய்தனர்.
பெருந்துறை பகுதியில், 16 கடைகளில் ஆய்வு செய்ததில், ஒரு கடையில் புகையிலை பொருள் ஒரு கிலோ விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறிந்து பறிமுதல் செய்தனர். கடையை மூடி கடைக்காரருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் பிளாஸ்டிக் கேரி பேக், நான்கு கடையில் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து கொடுத்த ஒரு உணவகத்துக்கு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். உணவுப்பொருள் சம்பந்தமான புகார்களை, 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.