ADDED : ஜூன் 25, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் போலீசார், தண்ணீர்பந்தல் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது ஒரு காரை சோதனை செய்ததில், 60 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது.
காரில் வந்தவர் துாத்துக்குடியை சேர்ந்த ரத்தின பாண்டி, 62, என்பது தெரிந்தது. பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. அவரை கைது செய்து, குட்கா பொருட்களுடன் காரை பறிமுதல் செய்தனர்.