/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொங்கல் தொகுப்பு 60 சதம் வினியோகம்
/
பொங்கல் தொகுப்பு 60 சதம் வினியோகம்
ADDED : ஜன 13, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, 1,000 ரூபாய், ஒரு கரும்பு, 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், 1,212 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 66,058 கார்டுதாரர்கள் உள்ளனர். இத்துடன் இலவச வேட்டி, சேலையும் வழங்குகின்றனர். நேற்று முன்தினம் வரை, 60 சதவீதம் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளின் விடுமுறை தினமான நேற்றும், பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. இன்று மாலைக்குள் அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கி முடிக்க, மாவட்ட வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.