/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
22 கோடி ரூபாய் மதிப்பில் 62 கி.மீ., சாலை அமைக்கும் பணி
/
22 கோடி ரூபாய் மதிப்பில் 62 கி.மீ., சாலை அமைக்கும் பணி
22 கோடி ரூபாய் மதிப்பில் 62 கி.மீ., சாலை அமைக்கும் பணி
22 கோடி ரூபாய் மதிப்பில் 62 கி.மீ., சாலை அமைக்கும் பணி
ADDED : நவ 18, 2024 03:34 AM
ஈரோடு: தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 2022--23ல் தார் தளம் வலுப்படுத்துதல் மற்றும் தார் தளம் புதுப்பித்தல் பணிகள், கப்பி சாலைகள் குறுக்கு வடிகால் பணி ஒரு எண்ணிக்கை அல்லது குறைவாக உள்ள சாலை பணிகள், கப்பி சாலைகள் குறுக்கு வடிகால் பணி ஒன்று எண்ணிக்கைக்கு மேல் உள்ள சாலைப்பணி என, 213 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதில், 208 பணிகள், 256 கி.மீ., நீளத்துக்கு, 82.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024-25ல், 65 பணிகள், 62.47 கி.மீ., நீளத்தில், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணி நடந்து வரு-வதாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.