/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு
/
மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு
மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு
மொபைல்போன் தொலைத்த 63 பேருக்கு திரும்ப ஒப்ப-டைப்பு
ADDED : டிச 28, 2024 02:35 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மொபைல் போன்களை தொலைத்த, 63 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு மொபைல் போன்களை தொலைத்ததாக, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவிலும், 'சி.இ.ஐ.ஆர்.,' தளத்திலும் புகார் செய்-திருந்தனர். புகார் குறித்து நடவடிக்கையில், 9 லட்சத்து, 89 ஆயி-ரத்து, 666 ரூபாய் மதிப்பில், 63 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில், மொபைல் போன்களை இழந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களது மொபைல் போன்களை எஸ்.பி., ஜவகர் திரும்ப வழங்கினார்.
இந்தாண்டில், 'சி.இ.ஐ.ஆர்.,' தளத்திலும், சைபர் செல் மூலமும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதுவரை, 627 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, சம்மந்தப்பட்ட புகார்தா-ரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.