/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால்நடை சந்தைக்கு வரத்தான 650 மாடுகள்
/
கால்நடை சந்தைக்கு வரத்தான 650 மாடுகள்
ADDED : அக் 04, 2024 01:09 AM
கால்நடை சந்தைக்கு வரத்தான 650 மாடுகள்
ஈரோடு, அக். 4-
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் வரை, 50 கன்றுகள், 20,000 ரூபாய் முதல், 68,000 ரூபாய் வரை, 250 எருமை மாடுகள், 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹராஷ்டிரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்தனர். பெரும்பாலான மாநிலங்களில் தற்போது குறைந்த அளவே மழை பெய்து வருவதால், மாடுகளை வாங்குவதில் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. வரத்தான கால்நடைகளில், 80 சதவீதம் விற்பனையாகின.
* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 34 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், ௧25 ரூபாய்; குறைபட்சம், 102 ரூபாய் என, 16.80 குவிண்டால் தேங்காய்பருப்பு வரத்தானது. மொத்தம் ரூ.1,78,129க்குஏலம் போனது
* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 840 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை, 340, காக்கடா, 325, செண்டுமல்லி, 40, கோழிகொண்டை, 84, ஜாதிமுல்லை, 500, கனகாம்பரம், 510, சம்பங்கி, 100, அரளி, 180, துளசி, 50, செவ்வந்தி, 140 ரூபாய்க்கும் விற்பனையானது.
* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 281 மூட்டை கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 65.௪௦ ரூபாய் முதல், 75.80 ரூபாய் வரை, 100.36 குவிண்டால் நிலக்கடலை, 7.௪௦ லட்சம் ரூபாய்க்கு விலை போனதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.