/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்களாதேஷை சேர்ந்த 7 பேர் புழல் சிறையில் அடைப்பு
/
பங்களாதேஷை சேர்ந்த 7 பேர் புழல் சிறையில் அடைப்பு
ADDED : அக் 13, 2024 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தக்க ஆவணங்கள், அனுமதியின்றி பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள், பெருந்துறையில் பணிக்கம்பாளையம், மேக்கூர், விஜயமங்கலம் பகுதிகளில் கட்டட வேலை, மில்களில் வேலை செய்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட பெருந்துறை போலீசார், சில நாட்களுக்கு முன், ௨௩ பேரை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் ஏழு பேர் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்-பட்டது. ஆறு பேர், இன்ப்ரா டெக் டைலரிங்கில் பணியாற்றுவது உறுதியானது. அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், சென்னையில் புழல் சிறையில், ஏழு பேரையும் நேற்று காலை
அடைத்தனர்.