/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்
/
ஈரோடு மாவட்டத்தில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்
ADDED : பிப் 08, 2026 06:46 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்-சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட சுகாதா-ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பருவ-நிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நி-லையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்-ளனர்.இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவ-லர்கள் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் பாதித்த ஏழு பேரில், ஐந்து பேர் ஆண்கள், ஒருவர் பெண், ஒரு குழந்தை அடங்குவர். குறிப்பாக பெருந்-துறை, அந்தியூர் பகுதியில் டெங்கு பாதிப்பு அதிக-ளவில் ஏற்பட்டது. ஏழு பேரும் குணமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் பகுதி-களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிது.
இவ்வாறு கூறினர்.

