/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது
/
இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது
இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது
இரு தரப்பினரிடையே அடிதடி 2 சிறுவர் உட்பட 7 பேர் கைது
ADDED : ஜூலை 13, 2025 01:59 AM
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், பால தாண்டயுத வீதியை சேர்ந்தவர் பூபதி, 44, கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மணிகண்டன், 23; இவர்களிடையே குடும்ப பிரச்னையால் முன் விரோதம் இருந்தது. பூபதியின் மகன் சமூக வலைதளத்தில் கத்தியை காட்டி மணிகண்டனை மிரட்டும் விதத்தில் பதிவு போட்டாராம். இதற்கு மணிகண்டனும் சவால் விடுத்தார். இந்நிலையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பூபதி மகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை ஏற்காத மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு பூபதி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பிலும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட, 12 பேர் சரமாரியாக தாக்கி கொண்டனர். தகவலறிந்து மொடக்குறிச்சி போலீசார் சென்றனர்.
கத்தியால் கிழித்தது, கட்டையால் தாக்கியதில் மணிகண்டன், 23. சஞ்சய் (எ) மெய்யரசு, 21, திவாகர், 22, அப்துல் அஜீஸ், 39, அப்துல் அனீபா, 34, காயமடைந்தது தெரியவந்தது.
இரு சிறுவர்கள் உள்ளிட்ட பூபதி, 44. வெண்டிபாளையம் காந்திஜி வீதி முகமது யூசுப், 51; வெண்டிபாளையம் சீனிவாசா வீதி குமார் மகன் சின்னா (எ) பிரவீன், 19, கார்த்தி, 21; வெண்டிபாளையம் பால தண்டாயுத வீதி மணிகண்டன், 33, என ஏழு பேரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.