/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்
/
தனித்தேர்வர்களுக்கு உதவ 7 சேவை மையம்
ADDED : டிச 07, 2024 07:18 AM
ஈரோடு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச் - ஏப்., 2025ல் எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், வரும், 8 மற்றும், 15 ஞாயிற்று கிழமை நீங்கலாக வரும், 15ம் தேதி வரை காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்-கலாம்.
இதற்காக, பவானி, பெருந்துறை, சத்திய அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி, ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கோபி நக-ரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு இடையன்காட்டுவலசு நகரவை உயர்நிலைப்பள்ளி, ஈரோடு
கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப்பள்ளியில் 7 சேவை மையம் செயல்படுகிறது. இங்கு அணுகி,
தேர்வு கட்டணம், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, www.dge.tn.gov.in என்ற இணைய
தளத்தில் அறியலாம்.