/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திண்டலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடை, 5 வீடுகள் இடித்து அகற்றம்
/
திண்டலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடை, 5 வீடுகள் இடித்து அகற்றம்
திண்டலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடை, 5 வீடுகள் இடித்து அகற்றம்
திண்டலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 7 கடை, 5 வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : டிச 22, 2024 01:10 AM
ஈரோடு, டிச. 22-
ஈரோடு அருகே திண்டலில், வருவாய் துறைக்கு சொந்தமான கோவில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து, நிலம் அளவீடு செய்யப்பட்டதில், 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்தவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து ஏழு கடை, ஐந்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டதை
கண்டுபிடித்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், செய்ய மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் கடந்த, 19ல் ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய் துறைக்கு ஒப்படைக்க உத்தரவானது.
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் அறிவுறுத்தினர். ஆர்.டி.ஓ., ரவி, ஈரோடு தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அலுவலர்கள், தாலுகா போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை நேற்று காலை அகற்றினர். இதன்படி ஐந்து வீடுகள், ஏழு கடைகள் ஜே.சி.பி., வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.