/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
70 ஆண்டுகளாகியும் நீக்கப்படாத நிபந்தனை சத்தியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : நவ 19, 2025 01:49 AM
சத்தியமங்கலம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் இணைந்து, கீழ்பவானி வாய்க்கால் பொதுப்பணித்துறை நிபந்தனை பட்டா நிபந்தனையை நீக்கக்கோரி, சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி சிறப்புரையாற்றினார்.
சத்தியமங்கலம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் வெட்டும்போது, 10,000 ஏக்கர் பட்டா நிலங்களை பொதுப்பணித்துறை நிபந்தனைக்கு உட்படுத்தியது.
வாய்க்கால் வெட்டி முடித்ததும், நிபந்தனையை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீக்கவில்லை. இதனால் வீடு மற்றும் வீட்டுமனை உரிமையாளர் நிலங்களை வாங்க, விற்க முடியாமல், பத்திரப்பதிவு செய்ய முடியாமல், வீடு கட்ட வங்கி கடன், தொழில் கடன் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர் என வருத்தப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஜோதி அருணாசலம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, நிபந்தனை பட்டாவால் பாதிக்கப்பட்டோர் அணி, ஒருங்கிணைப்பாளர் சோழா சேகர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.