/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதலாக பயன் பெறும் 7,000 மாணவர்கள்
/
கூடுதலாக பயன் பெறும் 7,000 மாணவர்கள்
ADDED : ஆக 25, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், ஈரோடு மாவட்-டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், 1,115 பள்ளிகளை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும், 49,400 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டம் நாளை முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இதன்படி நகர்புறத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும், 54 பள்ளி-களை சேர்ந்த, ௭,௦௦௦ பேருக்கு காலை உணவு வழங்கப்பட உள்-ளது. ஈரோடு ரயில்வே காலனி செயின்ட் ரீட்டா பள்ளியில், அமைச்சர் முத்துசாமி துவங்கி வைக்கிறார். இதையடுத்து மாவட்-டத்தில் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுவோர் எண்-ணிக்கை, 56,400 ஆக உயர்ந்துள்ளது.

