/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
19 கிராம உதவியாளர் பணிக்கு 730 பேர் விண்ணப்பம்
/
19 கிராம உதவியாளர் பணிக்கு 730 பேர் விண்ணப்பம்
ADDED : ஆக 05, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி தாலுகாவில் காலியாக உள்ள, 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் செய்ய கடந்த ஜூலை, 8ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. இன்று கடைசி நாள்.
இந்நிலையில் நேற்று வரை, 730 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பீல்., பி.இ., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.