/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
7,349 மாணவிகள் பாதுகாப்பு நிகழ்ச்சி; இதுவரை புகாரில்லை
/
7,349 மாணவிகள் பாதுகாப்பு நிகழ்ச்சி; இதுவரை புகாரில்லை
7,349 மாணவிகள் பாதுகாப்பு நிகழ்ச்சி; இதுவரை புகாரில்லை
7,349 மாணவிகள் பாதுகாப்பு நிகழ்ச்சி; இதுவரை புகாரில்லை
ADDED : செப் 24, 2025 01:10 AM
ஈரோடு :ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் பெண்கள், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் துவங்கப்பட்ட போலீஸ் அக்கா குறித்த திட்டம் தொடர்பான கூட்டம், ஈரோடு எஸ்.பி., சுஜாதா தலைமையில் நடந்தது.
இதில் பெண் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் தலா இரண்டு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:
இந்தாண்டு இதுவரை, 225 அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள், மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லுாரி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 7,349 போலீஸ் அக்கா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.அதேசமயம் இதுவரை பள்ளி, கல்லுாரி மாணவிகள், பெண்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.