/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை
/
உழவர் சந்தையில் 75 டன் காய்கறிகள் விற்பனை
ADDED : அக் 31, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்-தான, 75 டன் காய்கறிகள், 28.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்-கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நேற்று உழவர் சந்தைகளுக்கு விவசா-யிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் சந்தைகளிலும் நேற்று வரத்தான, 75 டன் காய்கறிகள், 28 லட்சத்து, 4,154 ரூபாய்க்கு விற்பனையானது. இத்தகவலை உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.