/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி கூடுதுறையில் 78 'சிசிடிவி' 3 உயர்மின் கோபுரம் அமைப்பு
/
பவானி கூடுதுறையில் 78 'சிசிடிவி' 3 உயர்மின் கோபுரம் அமைப்பு
பவானி கூடுதுறையில் 78 'சிசிடிவி' 3 உயர்மின் கோபுரம் அமைப்பு
பவானி கூடுதுறையில் 78 'சிசிடிவி' 3 உயர்மின் கோபுரம் அமைப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:58 AM
பவானி, ஆடி மாத அமாவாசை, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில், பவானியில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும், பவானி கூடுதுறையில், ஈரோடு மாவட்டம் மட்டு
மின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து, தங்களது மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி செல்வர்.
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, பவானி டி.எஸ்.பி.,ரத்தினகுமார் தலைமையில், பவானி சப்-டிவிஷனுக்குட்பட்ட, 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே போல், கூடுதுறை ஆர்ச்சில் இருந்து, கோவில் வளாகம், பரிகார மண்டபம் வரை, 78 'சிசிடிவி'கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பரிகார மண்டபம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் கோவில் ஆர்ச் ஆகிய மூன்று இடங்களில், உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசையை முன்னிட்டு வரக்கூடிய பக்தர்கள், கூடுதுறையில் சிரமமின்றி குளித்து செல்வதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைத்துள்ளனர்.