/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் கடித்து8 ஆட்டுக்குட்டி பலி
/
தெருநாய்கள் கடித்து8 ஆட்டுக்குட்டி பலி
ADDED : டிச 15, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், டிச. 15-
காங்கேயம், படியூர் அருகே குலந்தாங்காட்டில், குருமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, 19 செம்மறி ஆடுகள், 11 குட்டிகள் நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ வந்த நாய்கள், ஆடுகளை துரத்தி துரத்தி கடித்தன.
இதில் மூன்று ஆடுகள், 11 குட்டிகள் கடிபட்ட நிலையில், ஒரு ஆடு, எட்டு குட்டிகள் பலியாகி விட்டன. இதுகுறித்த தகவலின்படி சென்ற கால்நடை மருத்துவர், நாய்களால் கடிபட்ட பிற ஆடு
களுக்கு சிகிச்சை அளித்தனர். தெருநாய்களுக்கு கால்நடை பலியாகும் சம்பவம் தொடர்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.