ADDED : ஜூலை 31, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அரசால்
தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை
மீண்டும், மீண்டும் விற்பனை செய்ததாக, ஈரோடு மாவட்ட போதை பொருள்
தடுப்பு குழு பரிந்துரைப்படி, ஈரோடு முனிசிபல் காலனியில் ஒரு குடோன்,
சம்பத் நகர் உட்பட பல்வேறு இடங்களில் எட்டு கடைகளுக்கு நேற்று 'சீல்'
வைத்தனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ''குட்கா போன்ற தடை
செய்யப்பட்ட பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால், மூன்றாவது
முறையில் கைது செய்து, கடை உரிமம் ரத்து செய்யப்படும். அதிக அளவில்
பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 'சீல்' நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்,'' என்றனர்.
