ADDED : ஜூலை 31, 2026 05:26 AM

அந்தியூர்:அந்தியூர்
அருகே வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் வனப்பகுதியில் இருந்து, நேற்று
முன்தினம் நள்ளிரவு ஒற்றை யானை வெளியேறியது. அப்பகுதியில்
ஜெயம்மாள் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் புகுந்தது. அரை ஏக்கர்
பரப்பிலான கரும்பு பயிரை, தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
தகவலின்படி சென்ற அந்தியூர் வனத்துறையினர் விவசாயிகளுடன்
சேர்ந்து, பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் விரட்டினர்.
தாளவாடியில்...
தாளவாடி
வனச்சரக எல்லை பகுதியில் உள்ள நெய்தாளபுரம் கிராமத்தில், விவசாயி
சசிகுமார் நிலத்தை குத்தகை எடுத்து கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் நேற்று முன்தினம் இரவு
கரும்பு பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதில் ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட கரும்பு முற்றிலும் சேதமானது.
வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து, பாதிப்பு குறித்த
விவரங்களை பதிவு செய்தனர்.
