/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
80 அடி சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த 'பேட்டியா' தீர்மானம்
/
80 அடி சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த 'பேட்டியா' தீர்மானம்
80 அடி சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த 'பேட்டியா' தீர்மானம்
80 அடி சாலை திட்டத்தை விரைவில் செயல்படுத்த 'பேட்டியா' தீர்மானம்
ADDED : ஏப் 12, 2025 01:11 AM
80 அடி சாலை திட்டத்தை விரைவில்
செயல்படுத்த 'பேட்டியா' தீர்மானம்
ஈரோடு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. ஈரோடு செல்போன் விற்பனை, சர்வீஸ், ரீசார்ஜ் அசோசியேசன் தலைவர் ராஜா முகம்மது வரவேற்றார். டெக்ஸ்டைல்ஸ் அன்ட் கார்மன்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ரவிசந்திரன் அறிக்கை படித்தார். எம்.எல்.ஏ., சந்திரகுமார் பேசினார்.தொழில் உரிமம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவதை மாநகராட்சி நிறுத்த வேண்டும். நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருப்பது குறித்த அரசு உத்தரவை வரவேற்கிறோம். ஏற்கனவே பெயர் பதிவு செய்து நிறுவனங்கள், அப்பெயரை மாற்றி எழுதும்போது, போட்டி நிறுவனங்களால் பிரச்னை எழுகிறது. வரும் காலங்களில் புதிதாக பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு அவ்விதியை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.
தொழில், வணிக நிறுவனங்கள் சோலார் பேனல் அமைத்து மின் உற்பத்தி செய்து வழங்குகிறது. இதற்கு 'நெட் ஒர்க் சார்ஜ்' வசூலிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறி உள்ளது. அது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்படி அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையான, பெரியார் நகர் வழியாக ரயில்வே ஸ்டேஷன் - மீனாட்சிசுந்தரனார் சாலையை இணைக்கும், 80 அடி சாலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

