/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாநகராட்சியில் 82 சதவீத வரி வசூல்
/
ஈரோடு மாநகராட்சியில் 82 சதவீத வரி வசூல்
ADDED : மே 09, 2024 06:23 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 4 மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இன வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர். மாநகராட்சியில் சொத்து, குடிநீர், குத்தகை இனங்களில், 82 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் சொத்து, குடிநீர், குத்தகை இனங்களில், 82 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டுக்கான சொத்து வரியில், 73 கோடிக்கு, 60 கோடியும், குடிநீர் வரியில், 7.5 கோடிக்கு, 6.35 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி, காலியிட வரி உள்ளிட்ட பிற வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் இன்னும், 18 சதவீத வரியினங்கள் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், மீதமுள்ள வரியினங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வரி வசூல் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.