/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8.25 கிலோ நகை கையாடல்: வங்கி மேலாளர், மதிப்பீட்டாளர் கைது
/
8.25 கிலோ நகை கையாடல்: வங்கி மேலாளர், மதிப்பீட்டாளர் கைது
8.25 கிலோ நகை கையாடல்: வங்கி மேலாளர், மதிப்பீட்டாளர் கைது
8.25 கிலோ நகை கையாடல்: வங்கி மேலாளர், மதிப்பீட்டாளர் கைது
ADDED : அக் 28, 2025 12:08 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில், ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில், அடமானம் வைத்த நகை, கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் தணிக்கையில், 8.25 கிலோ நகை கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
விசாரணை துவங்கியதும், நகை மதிப்பீட்டாளராக, 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஈரோடு, ரங்கம்பாளையம் இரணியன் வீதி ரமேஷ்குமார், 45, மாயமானார்.
துணை பதிவாளர் ஜெயந்தி புகாரில், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை துவக்கினர்.
தலைமறைவான ரமேஷ்குமார், வங்கி மேலாளரான ஈரோடு, மூலப்பட்டறை காந்தி நகர் கதிரவன், 55. அவரது நண்பர் மற்றும் டிரைவர் செந்தில்குமார் இணைந்து கையாடல் செய்தது உறுதியானது.
ரமேஷ்குமார், கதிரவன் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள், அடமானம் வைத்த மற்றும் விற்பனை செய்த இடங்களில் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர். செந் தில்குமாரை தேடி வரு கின்றனர்.