/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்
/
830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்
830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்
830 விவசாயிகளின் ரூ.20 கோடி கூட்டுறவு வங்கிகளில் முடக்கம்
ADDED : டிச 16, 2024 03:22 AM
ஈரோடு: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள், 2021க்கு முன் பயிர் கடன் வாங்கி இருந்தனர். இதை தி.மு.க., அரசு, 2021ல் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்தது. சில விவசாயிகள் தொகையை வங்கியில் செலுத்திய பின் அரசும் கடன் தொகையை கூட்டுறவு வங்கியில் செலுத்தியது.
இந்த வகையில் ஈரோடு மாவட்ட கூட்டு-றவு வங்கிகளில், விவசாயிகள் செலுத்திய தொகை, ௨௦ கோடி ரூபாய் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமி-ழக விவசாயிகள் சங்க செயலாளர் சுப்பிரமணி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 830 விவசாயிகளின், 20 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கியில் நிலுவையில் உள்ளது. தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே தொடர்கிறது. எனவே நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்துள்ளோம். ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலினிடம் மனுவை தரவுள்ளோம். இவ்வாறு கூறினார்.