/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிப்பு
/
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிப்பு
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிப்பு
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிப்பு
ADDED : அக் 22, 2024 01:10 AM
விசைத்தறி தொழிலாளர்களுக்கு
8.33 சதவீதம் போனஸ் அறிவிப்பு
சென்னிமலை, அக். 22--
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெட்ஷீட் தயாரிக்கப்படுகிறது. தறி ஓட்டும் தொழிலாளர், உப தொழிலாளர்கள் என, ௫,௦௦௦க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு தீபாவளிக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் பட்டுவாடா வரும், 25ம் தேதி முதல் தொடங்கும் என்றும் சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.