/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டி.ஜி.புதூர் அருகே வீட்டில் 8.5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
/
டி.ஜி.புதூர் அருகே வீட்டில் 8.5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
டி.ஜி.புதூர் அருகே வீட்டில் 8.5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
டி.ஜி.புதூர் அருகே வீட்டில் 8.5 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜன 06, 2024 07:28 AM
டி.என்.பாளையம்: டி.ஜி.புதுாரை அடுத்த ஏளுர்மேடு, புள்ளப்பநாயக்கன்பாளையம், போயர் வீதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள், 56; விவசாயம் செய்கிறார்.
கணவர் இறந்து விட்டார். இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் கேரளாவில் போர்வெல் வண்டி வைத்து ஓட்டி வருகிறார். மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் ரத்தினம்மாள் வசித்து வருகிறார்.இரண்டு நாட்களாக புள்ளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, ஏளுரில் உள்ள விவசாய தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.புள்ளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வீடு, நேற்று முன்தினம் காலை திறந்து கிடப்பதாக, அக்கம்பக்கத்தினர் ரத்தினம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்தவர் வீட்டுக்கு சென்றார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8.5 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.