தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு கிழக்கு தொகுதியில் பதட்டமான 9 ஓட்டுச்சாவடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதட்டமான 9 ஓட்டுச்சாவடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதட்டமான 9 ஓட்டுச்சாவடி


ADDED : ஜன 16, 2025 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2025 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. தொகுதியில், ஒரு லட்சத்து 9,636 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 760 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள், 37 பேர் என மொத்தம், இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 433 பேர் வாக்காளர்களாக உள்ளனர். ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம். வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில், 237 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி மையங்களில் மின்சாரம், அடிப்படை வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்கள் கூட்ட நெரிசலின்றி வாக்களிக்க தேவையான, அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு, தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்ட, 237 ஓட்டுச்சாவடிகளில், நான்கு இடங்களில் உள்ள ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 237 ஓட்டுச்சாவடிகள் தேர்தல் கமிஷனால் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மக்கள் தொகை அதிகம் உள்ள பி.பெ.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி பகுதி ஆகிய நான்கு இடங்களில், ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்படும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us