/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டேரிபள்ளத்தில் 91.20 மி.மீ., மழை
/
குண்டேரிபள்ளத்தில் 91.20 மி.மீ., மழை
ADDED : செப் 30, 2024 12:59 AM
குண்டேரிபள்ளத்தில் 91.20 மி.மீ., மழை
ஈரோடு, செப். 30-
குண்டேரி பள்ளம் அணை பகுதியில், 91.20 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. சராசரியாக, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெயில் தகித்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு நகர பகுதி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக லேசானது முதல், மிதமான மழை பெய்து
வருகிறது.
நேற்று முன்தினம் காலை 8:00 முதல் நேற்று காலை 8:00 மணி வரை மாவட்டத்தில் மொத்தம், 194 மி.மீ., மழை பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில், 91.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழை விபரம்:
அம்மாபேட்டை, 1.20, வரட்டுப்பள்ளம் அணை, 63, எலந்தக்குட்டை மேடு,- 2.20, குண்டேரிப்பள்ளம் அணை, 91.20, கொடிவேரி அணை, 6, சத்தியமங்கலம், 11, பவானிசாகர் அணை, 19.40 மி.மீ., மழை பதிவானது.