/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
9,874 ஓட்டுனர் உரிமம் கடந்தாண்டில் ரத்து
/
9,874 ஓட்டுனர் உரிமம் கடந்தாண்டில் ரத்து
ADDED : ஜன 02, 2025 01:26 AM
ஈரோடு, ஜன. 2-
ஈரோடு மாவட்டத்தில், 9,874 ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார், கடந்தாண்டு சாலை விதிமுறை மீறல் தொடர்பாக, 1,76,940 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், ஐந்து கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரத்து, 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மதுபோதை வாகன இயக்கம் தொடர்பாக, 11,637 ஓட்டுனர்கள் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 9,874 ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு, 8,006 மதுபோதை வாகன இயக்க வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ல் 2,396 சாலை விபத்துக்களும், கடந்தாண்டு 2,214 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன என, போலீசார் தெரிவித்தனர்.