ADDED : ஜூன் 22, 2026 04:28 AM

ஈரோடு:நடப்பாண்டு
வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட மருத்துவ படிப்புகளுக்கான
நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு
மாவட்டத்தில், 13 மையங்களில் நடந்தது. இதில், 4,270 பேர் தேர்வு எழுத
விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், 990 பேர் பங்கேற்கவில்லை.
தேர்வு பணியில், 369 ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். 27
சி.ஏ.பி.எப்., வீரர்கள் மற்றும் போலீசாரும், மையங்களில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர். கடந்த மே, 3ல் தேர்வு நடந்த போது, 140 பேர்
ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மீதான அவ நம்பிக்கை, கல்லுாரிகளில் சேர்ந்து
விட்டது போன்ற காரணங்களால், 990 பேர் நீட் தேர்வை
புறக்கணித்துள்ளனர். 'பிரஸ்கிங்' முறையில் தேர்வர்கள்
பரிசோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். பலத்த
பாதுகாப்புடன் மாவட்டத்தில் அமைதியாக தேர்வு நடந்ததாக, அலுவலர்கள்
தெரிவித்தனர்.
