/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு
/
45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு
ADDED : செப் 26, 2024 02:36 AM
சத்தியமங்கலம்: பிறந்து, 45 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார், மருத்துவ துறையினர் விசாரணை நடத்தி வருகின்-றனர்.
டி.என்.பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் புனிதா, சத்திய-மங்கலம் போலீசில் அளித்த புகாரில், டி.என்.பாளையம் காட்டுவீ-தியை சேர்ந்த கருப்பாயி என்பவருக்கு கடந்த ஆக.,13.,ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. சத்தி அருகே கள்ளிபட்டியில் தன் உற-வினர் வீட்டில், கடந்த ஒரு வாரமாக கருப்பாயி தங்கியுள்ளார். நேற்று காலை குழந்தை இறந்து விட்டதாக கிடைத்த தகவல்படி, மருத்துவ
குழுவினர் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டும் போது இறந்துள்ளது தெரியவந்தது.குழந்தை சடலத்தை, பவானி கூடுதுறையில் உள்ள முட்புதரில் கருப்பாயி பாட்டி கண்ணம்மாள் மறைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இறந்த பெண் குழந்தையின் உடலை பிரேத
பரிசோதனைக்காக, சத்தி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை எப்படி இறந்தது? என பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிய வரும்.சத்தி போலீசார், மருத்துவ துறையினர் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.