ADDED : ஜூலை 05, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே பர்கூர் மேற்கு மலையில் உள்ள தம்புரெட்டியை சேர்ந்த மாதையன்
மனைவி ராசாத்தி, 35; நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராசாத்திக்கு,
நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
ஒசூரிலுள்ள, 108
அவசரகால ஆம்புலன்ஸ் மூலம், ராசாத்தியை அழைத்து கொண்டு அந்தியூர்
அரசு மருத்துவமனைக்கு வாகனம் விரைந்தது. வலி அதிகமானதால்,
தாமரைக்கரை அருகே பாதுகாப்பான இடத்தில் டிரைவர் பிரபாகரன்
நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் சந்திரசேகர் பிரசவம் பார்த்த
நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாய், சேய் அந்தியூர் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
