தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் இரவில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

ஈரோட்டில் இரவில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

ஈரோட்டில் இரவில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து


ADDED : ஜூலை 05, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில் காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் வாலிபர் குத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண் டைலர் கடை பணியை முடித்து, சத்தியமூர்த்தி வீதி அருகே நேற்றிரவு, 7:00 மணிக்கு நடந்து சென்றார். அவரிடம் சேலத்தை சேர்ந்த கபிலன் பழகியுள்ளார்.

இந்நிலையில் பெண்ணை பின் தொடர்ந்த கபிலன், தனது காதலை ஏற்குமாறு கூற அவர் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கபிலன், பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

108 அவசரகால ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கத்தியால் குத்தி தப்பி தலைமறைவான கபிலனை, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us