/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறுக்கே புகுந்த எருமை கூலி தொழிலாளி சாவு
/
குறுக்கே புகுந்த எருமை கூலி தொழிலாளி சாவு
ADDED : ஜூன் 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சிவகிரி அருகே காகம், எல்லப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மூர்த்தி, 48; எல்லப்பாளையம் சாலை அம்மன் கோவில் அருகே, ஸ்டார் சிட்டி பைக்கில் சென்றார். அப்போது திடீரென எருமை சாலையின் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க திடீர்
பிரேக் போட்டதில் தடுமாறி விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன் தினம் இறந்தார். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.