/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் மக்களை துரத்தி துரத்தி கடிக்கும் குரங்கை பிடிக்க கூண்டு வைப்பு

ADDED : நவ 22, 2024 01:19 AM
சென்னிமலை, நவ. 22--
சென்னிமலையில் முருகன் கோவில் வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் பல உணவு தேடி சென்னிமலை நகருக்குள் புகுந்து, வீடுகளில் உள்ள பொருட்களை நாசம் செய்வதுண்டு. இதுபோன்ற குரங்குகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அந்தியூர் வனப்பகுதியில் விட்டு வருவர். இந்நிலையில் சமீபகாலமாக சென்னிமலை அடிவார பகுதியில் ஒரே ஒரு குரங்கு மட்டும் பலரை கடித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், 10 பேரை கடித்துள்ளது. இதில் ஏழு பேர் சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த, 17ம் தேதி மட்டும் ஒரே நாளில் இருவரை கடித்துள்ளது. சென்னிமலை பார்க் ரோட்டை சேர்த்த ஐந்து வயது சிறுவனை நேற்று கடித்தது. தொடர் சம்பவங்களால் குரங்கை பிடிக்க சென்னிமலை வனத்துறையினர், சென்னிமலை போலீஸ் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்துள்ளனர்.