ADDED : அக் 12, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டை அடுத்த
லக்காபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மகன் அபிமன்யூ, 2;
வீட்டில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த குழந்தை அறைக்குள் சென்ற
நிலையில், கதவு தானாக சாத்திக் கொண்டது.
ஆட்டோமேடிக் லாக் என்பதால்
கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து
நீண்ட நேரம் போராடியும் கதவை திறக்க முடியவில்லை. அதேசமயம் குழந்தை
கதறி அழுதபடி இருந்தது. ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
தரப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், நவீன கருவி மூலம்
கதவை திறந்து குழந்தையை மீட்டனர்.
