ADDED : அக் 12, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டை
அடுத்த சின்ன சடையம்பாளையம் வீரன்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர்
ராஜவேல். பசு மாடு வளர்க்கிறார்.
கன்று ஈன தயாராக இருந்த நிலையில்,
பாதுகாப்புக்காக ஒரு சிறு அறையில் பசுவை கட்டியிருந்தார். நேற்று
மாலை பசு மாடு கன்றை ஈன்றது. ஆனால் அறைக்குள் இருந்து வெளியே வர
முடியாமல் தவித்தது.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு
நிலையத்துக்கு ராஜவேல் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர்
சென்று முதலில் கன்றை மீட்டனர். பின்னர் பசு மாட்டை கயிறு கட்டி இழுத்து
வெளியே கொண்டு வந்தனர்.
