/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி ரூபாய் காகிதத்தை தந்து சில்லரை மாற்றியதால் பரபரப்பு
/
போலி ரூபாய் காகிதத்தை தந்து சில்லரை மாற்றியதால் பரபரப்பு
போலி ரூபாய் காகிதத்தை தந்து சில்லரை மாற்றியதால் பரபரப்பு
போலி ரூபாய் காகிதத்தை தந்து சில்லரை மாற்றியதால் பரபரப்பு
ADDED : டிச 05, 2024 07:59 AM
கோபி: டீக்கடை நடத்தி வரும் தம்பதியிடம், 100 ரூபாய்க்கு சில்லரை கேட்டு, இருட்டில் போலி, 110 ரூபாய் காகிதத்தை கொடுத்து, ஏமாற்றிய மர்ம நபரால் கோபியில் பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 65. இவர் மனைவி லட்சுமி, 60. இருவரும்
கோபியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் மின்சாரம் தடைபட்ட
நேரத்தில், ஒரு மர்ம நபர் பன்னீர்செல்வம் தம்பதியை அணுகி, நுாறு ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். அவருக்கு,
பன்னீர் செல்வம் சில்லரை கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்த பின் பார்த்தபோது, அந்த மர்ம
நபர் கொடுத்து சென்றது, சாக்லெட்டுக்கு இலவசமாக வழங்கப்-படும், 110 ரூபாய் என பதிவு கொண்ட, போலி
ரூபாய் காகிதம் என தெரியவந்தது. இதனால் வயதான தம்பதி அதிர்ச்சியடைந்-தனர்.