/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி பெருந்துறை தம்பதியர் மீது புகார்
/
சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி பெருந்துறை தம்பதியர் மீது புகார்
சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி பெருந்துறை தம்பதியர் மீது புகார்
சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி பெருந்துறை தம்பதியர் மீது புகார்
ADDED : நவ 13, 2024 03:40 AM
ஈரோடு:நகை
சீட்டு நடத்தி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பெருந்துறை
தம்பதியர் மீது, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.
ஈரோடு
மாவட்டம் அறச்சலுார் அட்டவணை அனுமன்பள்ளி ஆதிதிராவிடர் தெருவை
சேர்ந்த நாச்சிமுத்து மனைவி செல்லம்மாள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட
பெண்கள், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த புகார் மனுவில்
கூறியிருப்பதாவது:
பெருந்துறை, சரளை பகுதியை சேர்ந்த
அமுதவாணன், அவரது மனைவி யுவமணி, சிறு சேமிப்பு திட்டம் பெயரில் நகை
சீட்டு, தீபாவளி பலகார சீட்டு நடத்தி வருகின்றனர். இதற்கு முன் இரண்டு
தீபாவளி சீட்டுகளில் முறையாக அனைவருக்கும் வழங்கியதால்,
நடப்பாண்டு தீபாவளி நகை சீட்டில் சேர்ந்தோம். வாரந்தோறும், 300 ரூபாய்,
500 ரூபாய், ௧,000 ரூபாய் எனவும், சிலர் மாத சீட்டிலும் குறிப்பிட்ட
தொகை செலுத்தினர்.
வாரச்சீட்டு, மாத சீட்டு முடிந்த நிலையில், நகை,
பலகாரம் வரும் என எதிர்பார்த்தோம். வராததால் அமுதவாணன் வீட்டுக்கும்,
அவர்கள் நடத்தும் மருந்து கடைக்கும் சென்று பார்த்த நிலையில்,
தலைமறைவானது தெரிந்தது. எங்கள், 20 பேரிடம் இருந்தும், சோளிபாளையம்
பகுதிகளிலும் நகை மற்றும் பலகார சீட்டு வகையில், 10 லட்சம் ரூபாய் வரை
மோசடி செய்துள்ளனர். அமுதவாணன், யுவமணி மீது நடவடிக்கை எடுத்து,
பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.