/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூரில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத ஒழுங்குமுறை விற்-பனை கூடம்
/
நம்பியூரில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத ஒழுங்குமுறை விற்-பனை கூடம்
நம்பியூரில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத ஒழுங்குமுறை விற்-பனை கூடம்
நம்பியூரில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத ஒழுங்குமுறை விற்-பனை கூடம்
ADDED : அக் 26, 2024 07:54 AM
நம்பியூர்: நம்பியூரில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில், நம்பியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நெல், நிலக்கடலை, மக்-காச்சோளம், பருத்தி, சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை இருப்பு வைக்கவும், விற்பனை செய்-யவும் ஏதுவாக, 2 ஏக்கர் பரப்பளவில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில், 1,000 மெட்ரிக் டன் தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு கட்டடம் கட்டப்பட்டது.
பணி முடிந்து கடந்த மார்ச், ௧௩ம் தேதி அரசால் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து நபார்டு திட்டத்தில், விவசா-யிகள் ஓய்வறை, பரிவர்த்தனை கூடம், அலுவ-லகம் இணைந்த கிடங்கு, எடை மேடை உள்ளிட்-டவை கட்டப்பட்டது. இதுவும் பணி முடிந்து மூன்று மாதமாகி விட்டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் நெல், நிலக்கடலை, சோளம், மக்-காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கிறோம். இவற்றை விற்பனை செய்ய, கோபி, சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்கிறோம்.
விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து நம்பி-யூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டி, திறப்பு விழாவும் கண்டுள்ளது. ஆனால், பயன்-பாட்டுக்கு வராமல் உள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல், பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் மற்றும் அர-சுக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு கூறினர்.