/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுபான பாட்டில்களுடன் கலெக்டர் முகாம் வந்த விவசாயி
/
மதுபான பாட்டில்களுடன் கலெக்டர் முகாம் வந்த விவசாயி
மதுபான பாட்டில்களுடன் கலெக்டர் முகாம் வந்த விவசாயி
மதுபான பாட்டில்களுடன் கலெக்டர் முகாம் வந்த விவசாயி
ADDED : ஜன 22, 2024 12:01 PM
ஈரோடு: மதுபான பாட்டில்களுடன், ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு, செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவசுப்பிரமணி, 57. இவருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை (எண்: 3532) செயல்பட்டு வருகிறது. அங்குள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜ்குமார். கடையில் குறித்த நேரத்துக்கு முன்பாக அதாவது மதியம், 12:00 மணிக்கு முன்னரும், இரவு, 10:00 மணிக்கு பின்னரும் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தெரிகிறது.
இது குறித்து பலமுறை ராஜ்குமாரிடம் தெரிவித்தும், மது விற்பனை நடப்பதாக கூறி நேற்று காலை சிவசுப்பிரமணி, 1 பீர் பாட்டில், 7 இந்திய தயாரிப்பு மதுபான பாட்டில்களை கடையில் இருந்து பறித்து கொண்டு, சம்பத் நகரில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு நேரில் வந்தார். தகவலறிந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சிவசுப்பிரமணியை தொடர்பு கொண்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்.
அங்கு வந்த அவரிடம். மதுபாட்டில்களை ஈரோடு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, புகார் தெரிவிக்க கலெக்டர் அறிவுறித்தினார். இதையடுத்து, போலீசாரிடம் மதுபான பாட்டில்களை சிவசுப்பிரமணி ஒப்படைத்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.