ADDED : மார் 03, 2024 01:54 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்;காங்கேயம் அருகே, காடையூரில் அரிசி ஆலை சாக்கு வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
காங்கேயம், காடையூர் அருகில் ஈஸ்வரமூர்த்தி, 50, என்பவர் ஸ்ரீ மஹா அரிசி ஆலை நடத்தி வருகிறார். இதன் அருகில் பழைய சாக்குகளை அடுக்கி வைக்கப்படும், ஓலை குடிசையில் நேற்று காலை, 11:00 மணி அளவில் தீ பற்றியது. காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வீரர்கள், விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
