ADDED : மார் 03, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே, வாணிப்புத்துார் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி என்ற கருப்பண கவுண்டர்.
59. இவருக்கு, 10 ஏக்கர் விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவர் மூன்றரை ஏக்கர் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிந்தது. பங்களாப்புதுார் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றி எரிந்ததில், 2 ஏக்கருக்கு மேல் கரும்பு சேதமானது.பங்களாப்புதுார் போலீசார் விசாரிகின்றனர்.

