ADDED : ஜூன் 10, 2026 02:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் மாணிக்கம், 47; இவருக்கு சொந்தமான, 2
ஏக்கர் பரப்பிலான தென்னந்தோப்பு உள்ளது.
தென்னந்தோப்பில் காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின்
வேகத்தால் தென்னை மரங்களிலும் தீப்பிடித்தது. ஈரோடு தீயணைப்பு
நிலைய வீரர்கள், 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஐந்து
தென்னை மரங்கள் தீக்கிரையானது. மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் விபத்து
நேரிட்டது தெரிய வந்தது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
