/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பரபரப்பு
/
குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பரபரப்பு
ADDED : ஜூலை 06, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை, அரச்சலுார் ரோடு, சுடுகாடு அருகே சாக்கடையில் இருந்து அள்ளிய குப்பை மற்றும் கழிவு கிடந்தது. இதற்கு யாரோ நேற்று தீ வைத்துள்ளனர். காற்று பலமாக வீசியதால் தீ பரவி, அருகிலிருந்து செடி, கொடிகளில் பற்றி எரிந்தது. இதனால் புகை மண்டலம் ஏற்பட்டது.
சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். அருகில் மூங்கில், தென்னங்கீற்று விற்பனை கடை உள்ளது. தீ பரவி எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.