/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
/
மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
ADDED : அக் 14, 2024 05:13 AM
தாளவாடி: தாளவாடி மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று காலை முதலே கனமழை பெய்தது. குறிப்பாக திகினாரை, கல்-மண்டிபுரம், தொட்டபுரம் கொட்டி தீர்த்தது. இதனால் ஓடை-களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கல்மண்டிபுரம் பகு-தியில் தரைப்பாலத்தை மழை நீர் சூழ்ந்து சென்றது. திகினாரை கிராமத்தில் திம்மன் குட்டை நிரம்பி தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொட்ட-புரம் கிராமத்தில் தாளவாடி சாலையில் மழைநீர் சூழ்ந்தபடி சென்-றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீர் வடிந்த பிறகே போக்குவரத்து தொடங்கியது.* சத்திய மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை, 8:30 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரம் பெய்தது. பின் இடைவெளி விட்டு துாறிக் கொண்டே இருந்தது. மதியம், 2:00மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்-தது. இரவு, 9:00 மணிக்கு மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.