/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆளில்லாத வீட்டில் கசிந்த காஸ் தீயில் முழுவதும் எரிந்து சேதம்
/
ஆளில்லாத வீட்டில் கசிந்த காஸ் தீயில் முழுவதும் எரிந்து சேதம்
ஆளில்லாத வீட்டில் கசிந்த காஸ் தீயில் முழுவதும் எரிந்து சேதம்
ஆளில்லாத வீட்டில் கசிந்த காஸ் தீயில் முழுவதும் எரிந்து சேதம்
ADDED : மார் 31, 2025 02:55 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி ஜெ.ஜெ., நகர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். வாடகை வாகன டிரைவர். இவரது மனைவி சசிகலா. கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்று விட்ட நிலையில் நேற்றிரவு, 7:௦௦ மணி அளவில் உட்புறம் தென்னை ஓலை மேற்புறம் தகர சீட்டால் வேயப்பட்டிருந்த வீட்டில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் கூரையில் தீப்பிடித்து பரவி எரிந்தது. தகவலறிந்து சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், மக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு எரிந்து சேதம-டைந்துவிட்டது. வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகின. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காஸ் சிலிண்டர் கசிவால் விபத்து ஏற்-பட்டது தெரியவந்தது.